தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது

குடும்ப நல திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதத்துடன் கூறினார்.

Update: 2022-07-11 18:50 GMT

குடும்ப நல திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதத்துடன் கூறினார்.

முன்னோடி மாநிலம்

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மயஉருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத்துறை சார்பில் கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில் உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்பட்டது. அப்போது அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு சுகாதாரத்துறை கட்டிடங்களை திறந்து வைத்தும், திருநங்கைகள் மற்றும் வளரிளம் பருவத்தினருக்கான சிறப்பு சிகிச்சை மற்றும் பயிற்சியினையும் தொடங்கி வைத்தனர்.

விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:- குடும்ப நல திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. அமைச்சரின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் முதல் முறையாக அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியோடு அருப்புக்கோட்டை மற்றும் ராஜபாளையத்தில் 2 அரசு மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரிகளை மேம்படுத்துவதற்கு இந்த ஆண்டு ரூ. 70 கோடியே 39 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மக்களை தேடி மருத்துவம்

மேலும் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் விபத்து சிகிச்சை பிரிவுக்கு ரூ. 2 கோடியே 30 லட்சம், மல்லாங்கிணறு, எம். புதுப்பட்டி, குன்னூர், தாயில்பட்டி, பந்தல்குடி, நரிக்குடி ஆகிய பகுதிகளில் சுகாதார மையங்கள் அமைப்பதற்கு ரூ. 4 கோடியும், ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த ரூ.18 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏழை, எளிய மக்கள் ஒரு கோடி பேருக்கு மருந்து பெட்டகம் 2 மாதங்களில் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழிப்புணர்வு பேரணி

அதேபோல உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

விழாவில் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி, எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், ரகுராமன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், விருதுநகர் நகர சபை தலைவர் மாதவன், யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர், மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் நாராயண பாபு, பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம், குடும்பநலத்துறை இயக்குனர் டாக்டர் ஹரிசுந்தரி, மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சங்குமணி மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழ் மன்ற தொடக்க விழாவில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்