தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்க கோட்ட மாநாடு

ஆரணியில் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்க கோட்ட மாநாடு நடந்தது.

Update: 2023-07-30 10:00 GMT

ஆரணி

தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் 8-வது செய்யாறு கோட்ட மாநாடு ஆரணி தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள நில அளவை சங்க கட்டிடத்தில் நடந்தது.

கோட்டத்தலைவர் ரா.சண்முகம் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொது செயலாளர் ஆ.அம்சராஜ், மாநில செயலாளர் மா.மகாதேவன், ஆரணி வட்டக்கிளை தலைவர் இல.பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு அமைப்பு கொடியை ஏற்றி வைத்து மாநாட்டை தொடங்கி வைத்தனர்.

மாநாட்டில் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக முறைப்படுத்த வேண்டும்.

சாலை பணியாளர்களின் பணி நீக்க காலம் மற்றும் பணிக்காலத்தில் உயிர் நீத்தோரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும்.

சாலை பணியாளர்களுக்கு ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்து படி மற்றும் சீருடை சலவைப்படி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களான நிறைவேற்றப்பட்டது.

இதில் கோட்ட செயலாளர் ஆர்.ரமேஷ், கோட்ட பொருளாளர் டி.ரவி, கோட்ட துணைத்தலைவர்கள் தொல்காப்பியன், பி.ராமு, கோட்ட இணைச் செயலாளர் அறிவழகன், மாவட்ட தலைவர் மு.மாரியப்பன், வட்டக்கிளை செயலாளர் ஆர்.பரசுராமன், பொருளாளர் எஸ்.விஜயகுமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் எழிலன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்