தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது அல்ல - மத்திய சுகாதாரத்துறை பதில்

தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது அல்ல என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

Update: 2022-12-29 06:05 GMT

கோப்புப்படம்

சென்னை,

நீட் விலக்கு மசோதாவுக்கு தமிழக அரசு அனுமதி கோருவது தேசிய இறையாண்மைக்கு எதிரானதா என்று உள்துறை அமைச்சகம் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசின் இரண்டு துறைகள் வெவ்வேறு பதில்களை அளித்திருப்பது அம்பலமாகியுள்ளது.

தமிழக அரசு கவர்னருக்கு அனுப்பி வைத்துள்ள நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கு இதுவரை ஒப்புதல் கிடைக்காத நிலையில், இது தொடர்பாக பொது பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் சில தகவல்களை பெற்றுள்ளது.

அதில் நீட் விலக்கு மசோதாவுக்கு தமிழக அரசு அனுமதி கேட்பது தேசிய இறையாண்மைக்கு, நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானதா என்று உள்துறை அமைச்சகம் எழுப்பிய கேள்விக்கு, இல்லை என சுகாதாரத்தை அமைச்சகமும் எதிரானது என்று ஆயுஷ் அமைச்சகமும் பதில் அளித்திருப்பது தெரியவந்துள்ளது.

இவ்வாறு மத்திய அரசின் இரு துறைகளும் முரண்பட்ட பதிலளித்துள்ள நிலையில், உடனடியாக சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி தமிழக அரசு இது தொடர்பாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்று பிரின்ஸ் கஜேந்திர பாபு கேட்டுக் கொண்டுள்ளார்.

Full View

Tags:    

மேலும் செய்திகள்