தமிழக அரசு 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் - நயினார் நாகேந்திரன்

தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.

Update: 2022-11-18 12:45 GMT

நெல்லை,

தமிழக அரசு 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.

அவர் இது தொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது:-

10 சதவீத இட ஒதுக்கீடை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இந்த இட ஒதுக்கீட்டில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என பல தரப்பினரும் உள்ளனர். 10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக எதிராக முடிவு எடுத்துள்ளது, நீதிமன்றத்தையும் அவர்கள் நாடி உள்ளனர்.

தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. மத்திய அரசு கொண்டுவந்துள்ள 10 சதவீதம் இட ஒதுக்கீட்டை தமிழக அரசும் உடனடியாக அமலுக்கு கொண்டு வர வேண்டும்.

அ.தி.மு.க.வில் பிரிந்து உள்ளவர்கள் ஒன்றாக சேர்ந்தால் பலம். அ.தி.மு.க.வின் அனைத்து தரப்பும் ஒன்றாக இருந்து தேர்தலை சந்தித்தால் நன்றாக இருக்கும். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் கூட்டணிகளை நம்பியே உள்ளது. தனியாக தேர்தலை சந்திப்போம் என எந்த கட்சியும் சொல்ல முடியாது.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளது. நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட கட்சி தலைமை வாய்ப்பு தந்தால் போட்டியிடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்