5 போலீஸ் அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது - தமிழக அரசு அறிவிப்பு
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் சிறப்பாக பணியாற்றிய 5 போலீஸ் அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை:
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
- சென்னை மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி
- தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கா.ஜெயமோகன்
- சேலம் மண்டலம் மத்திய நுண்ணறிவு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன்
- விழுப்புரம் மண்டலம் மத்திய நுண்ணறிவு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பா.இனாயத் பாஷா
- செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் போலீஸ் நிலைய போலீஸ்காரர் சு.சிவனேசன்
ஆகியோருக்கு மதுவிலக்கு அமலாக்கப் பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக காந்தியடிகள் காவலர் விருது வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்த விருது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் வருகிற ஜனவரி 26-ந்தேதி குடியரசு தினத்தன்று வழங்கப்படும். இந்த விருதுடன், பரிசுத்தொகையாக ரூ.40 ஆயிரம் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.