ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிப்பதில் தமிழக அரசு ஆயிரம் மடங்கு உறுதி - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி
ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிப்பதில் தமிழக அரசு ஆயிரம் மடங்கு உறுதி உள்ளது என்று அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி அளித்தார்.
மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி, நிருபர்களிடம் கூறுகையில், தமிழக பட்ஜெட் பிரமாதமாக உள்ளது. இது மக்கள் நல பட்ஜெட். விவசாயிகளுக்கும், எல்லா தரப்பு மக்களுக்கும் நன்மை பயக்கும் விதமாக உள்ளது. பால் விற்பனையாளர்கள் சம்பந்தமாக கூடிய விரைவில் நல்ல தீர்வு வரும். வட மாநிலங்களில் ஏற்படும் தட்டுப்பாடுகளின் காரணமாக இது போன்ற பிரச்சினைகள் வருகிறது. பா.ஜனதா தலைவர் அண்ணாமலை விமர்சனங்களுக்கு, இங்கு இடமே இல்லை. அவர் கூறுவது உண்மை இல்லை. ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிப்பதில், ஆயிரம் மடங்கு தமிழக அரசு உறுதியாக உள்ளது. மீண்டும் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக நீதிமன்றத்தை நாடினாலும், தி.மு.க. அரசு எது வந்தாலும் சந்திக்கும். ராகுல்காந்தி விவகாரத்தில், நீதிமன்றங்கள் இருக்கிறது, நிச்சயம் சத்தியம் வெல்லும் என்றார்.