கனமழை எச்சரிக்கை வாபஸ் பெறப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு

இன்று விடப்பட்டிருந்த மிக கனமழை எச்சரிக்கைக்கான அறிவுரைகள் திரும்பப் பெறப்படுவதாக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

Update: 2022-11-19 16:18 GMT

சென்னை,

கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் திரும்பப் பெற்றுவிட்டதால், இன்று காலை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் வழங்கப்பட்ட மிக கனமழை எச்சரிக்கைக்கான அறிவுரைகள் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிக்கையின் படி, இன்று (19-11-2022) காலை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையால், 20-11-2022 முதல் 22-11-2022 வரை பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று செய்தி வெளியீடு வழங்கப்பட்டது.

பின்னர் இன்று (19-11-2022) 3.00 மணி அளவில் வந்த இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிக்கையின்படி,

பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் வழங்கிய மிக கனமழை எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டுவிட்டது. ‌

இந்நிலையில் இன்று (19-11-2022) காலை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் வழங்கப்பட்ட மிக கனமழை எச்சரிக்கைக்கான அறிவுரைகள் திரும்ப பெறப்படுகின்றன.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்