தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஜோஷி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேகர், அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட செயலாளர் ரவி, இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். சரண்டர் விடுப்பு ஊதியம், 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை, அகவிலைப்படி நிலுவைத் தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதில் அனைத்துத் துறை அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள், ஜாக்டோ ஜியோ செய்தி தொடர்பாளர் வாரா மற்றும் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் சுமதி நன்றி கூறினார்.