தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-09-21 19:15 GMT

கரூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் விஜயகுமார் கண்டன உரையாற்றினார். இதில் மகேந்திரன், சிங்கராயர், அரசகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம் பணிக்கொடை வழங்கப்படும். 70 வயது நிறைவு செய்தவர்களுக்கு 10 சதவீதம், 80 வயது நிறைவு செய்தவர்களுக்கு மேலும் 10 சதவீதம் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மருத்துவ செலவு ரூ.5 லட்சத்திற்கு மேல் வரம்பு உயர்த்தப்படும். அனைத்து வகையான மருத்துவ செலவினங்களும் அடங்கும் வகையில் காப்பீட்டு திட்டம் மாற்றி அமைக்கப்படும்.

அ.தி.மு.க. அரசால் பணிநீக்கம் செய்யப்பட்டு இறந்த மக்கள் நலப்பணியாளர் வாரிசுக்கு அரசு வேலையும், குடும்ப நிவாரண நிதியாக ரூ.5 லட்சமும் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிப்படி அரசு ஊழியர்கள் தொடர்பாக வழங்கப்பட்ட வாக்குறுதிகள் உள்ளிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் உடனடியாக நிறைவேற்றிடக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடந்ததாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்