தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டையில் தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டையில் தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதில் மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, தனியார் வேலைவாய்ப்பு முகாம், கலைஞரின் வருமுன் காப்போம், பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு, கர்ப்பிணிகளுக்கு பராமரிப்பு நிதிஉதவித்தொகை, கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன், சுயஉதவிக்குழுவினருக்கு கூட்டுறவு கடன் தள்ளுபடி உள்பட பல்வேறு திட்டங்களை விளக்கும் புகைப்படங்கள் இடம்பெற்று இருந்தன.
அதேபோல் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, கலெக்டர் விசாகன் ஆகியோர் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்களும் இருந்தன. இதனை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.