தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
மயிலாடுதுறை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளரை கண்டித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர் தொழிற்சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் நக்கீரன் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் ஆப்ரஹாம் லூதர்கிங் வரவேற்றார். இதில் மாநில பொது செயலாளர் வள்ளுவன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளரின் நிர்வாக சீர்கேடு மற்றும் தொழிலாளர் விரோத போக்கினை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் தம்பித்துரை, வீரமணி, முத்தையன், சிவாஜி, கிருபாகரன், பொய்யாமொழி, காமராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மண்டல பொருளாளர் பக்கிரிசாமி நன்றி கூறினார்.