தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி பயணம்
கூட்டணி குறித்து பாஜக மூத்த தலைவர்களுடன் அண்ணாமலை ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை,
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மத்திய இணை மந்திரி எல்.முருகன், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாடவுள்ளார்.
எல்.முருகனின் இல்ல பொங்கல் விழாவில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர். இந்த விழாவில் பங்கேற்பதற்காக அண்ணாமலை இன்று மாலை டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.
பொங்கல் விழாவில் பங்கேற்கும் அண்ணாமலை, நாளை பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது கூட்டணி குறித்து பாஜக மூத்த தலைவர்களுடன் அண்ணாமலை ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.