பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து...!
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 13-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந் தேதி வரையும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 14-ந் தேதி முதல் அடுத்த மாதம் 5-ந் தேதி வரையும் பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளது.
சென்னையில் மட்டும் தலா 180 மையங்களில் 88 ஆயிரத்து 104 மாணவ-மாணவிகள் 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ளனர்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் தனித்தேர்வர்களாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகளும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை 7 லட்சத்து 88 ஆயிரத்து 64 மாணவ-மாணவிகளும் என மொத்தம் 16 லட்சத்து 39 ஆயிரத்து 367 பேர் எழுத இருக்கின்றனர்.
பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,
நாளை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.
புதிய துறைகளும், தொழில்நுட்பங்களும் உருவாகியிருக்கும் இக்காலத்தில், மாணவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது.
நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.