தமிழ்நாடு ஆஷா ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
குறைந்தபட்ச ஊதியம் வழங்கக்கோரி தமிழ்நாடு ஆஷா ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு ஆஷா ஊழியர் சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் குறைந்தபட்ச ஊதியம் வழங்கக் கோரி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
துணைத்தலைவர் ஜெயசித்ரா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராதா, சரிதா, தேவகி, சாந்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாநில தலைவர் டெய்சி, மாநில செயலாளர் சீதாலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஆஷா ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும்.
மருத்துவ காப்பீடு, போக்குவரத்துப்படி வழங்க வேண்டும். பணிக்கொடை, இறப்பு நிதியாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.
கொரோனா காலப்பணி ஊக்கத்தொகை ரு.20 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் ஆஷா ஊழியர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.