தர்மபுரி மாவட்டத்தில் தமிழ் திறனாய்வு தேர்வு: 7,127 மாணவ-மாணவிகள் எழுதினர்

தர்மபுரி மாவட்டத்தில் நடந்த 11-ம் வகுப்பு தமிழ் திறனாய்வு தேர்வை 7 ஆயிரத்து 127 மாணவ-மாணவிகள் எழுதினர்.

Update: 2022-10-16 19:00 GMT

திறனாய்வு தேர்வு

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழ் திறனாய்வு தேர்வு நடந்தது. இதற்காக மாவட்டம் முழுவதும் 23 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தேர்வு எழுத மொத்தம் 7 ஆயிரத்து 361 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.

இந்தநிலையில் நேற்று நடைபெற்ற தேர்வில் 7 ஆயிரத்து 127 மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 234 பேர் தேர்வில் பங்கேற்க வில்லை. தேர்வு கண்காணிப்பு பணியில் 357 ஆசிரியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

ஆய்வு

மாவட்டம் முழுவதும் நடைபெற்ற இந்த தேர்வை முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.இந்த தகுதி தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ-மாணவிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதந்தோறும், ரூ.500 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்