தாம்பரம்-நாகர்கோவில் ரெயிலை தினசரி இயக்க வலியுறுத்துவேன்;ரெயில் பயணிகள் சங்கத்தினரிடம் விஜய்வசந்த் எம்.பி. உறுதி

தாம்பரம்-நாகர்கோவில் ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க வலியுறுத்துவேன் என்று ரெயில் பயணிகள் சங்கத்தினரிடம் விஜய்வசந்த் எம்.பி. கூறினார்.

Update: 2022-11-02 20:13 GMT

நாகர்கோவில், 

தாம்பரம்-நாகர்கோவில் ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க வலியுறுத்துவேன் என்று ரெயில் பயணிகள் சங்கத்தினரிடம் விஜய்வசந்த் எம்.பி. கூறினார்.

ஆலோசனை

நாகர்கோவிலில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் விஜய்வசந்த் எம்.பி. ரெயில் பயணிகள் சங்கத்தினரிடம் ஆலோசனை நடத்தினார்.

இதில் திருவனந்தபுரம் கோட்ட ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் சூசைராஜ், மதுரை கோட்ட ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் சிவக்குமார், ரெயில் பயணிகள் சங்கத்தை சேர்ந்த ஸ்ரீராம், கன்னியாகுமரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் முருகதாஸ், டவுன் ரெயில்வே சங்கத்தை சேர்ந்த மோகன், தமிழ்நாடு தென் மாவட்ட ரெயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் ரெஜிசிங், சி.எல்.ஜோ எச்.இ.எ.எல் சங்கத்தைச் சேர்ந்த செல்வின் வஸ்தின் உள்ளிட்ட சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தாம்பரம்-நாகர்கோவில் ரெயில்

இதில் தாம்பரம் - நாகர்கோவில் ெரயிலை தினசரி ரெயிலாக இயக்க வேண்டும். ஷார்மினார் விரைவு ரெயிலை கன்னியாகுமரி வரை நீடிக்க வேண்டும். வார கடைசியில் வேளாங்கண்ணி செல்ல கன்னியாகுமரி வழித்தடத்தில் ரெயில் இயக்க வேண்டும். டவுன் ரெயில் நிலையத்தில் பரசுராம் ரெயில் 1 நிமிடம் நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

இதுபற்றி ரெயில்வே அதிகாரிகளிடம் நேரடியாக கோரிக்கைகளை வலியுறுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் வரக்கூடிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இதுகுறித்து பேசுவேன் என்று ரெயில் பயணிகள் சங்கத்தினரிடம் விஜய்வசந்த் எம்.பி. கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்