வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி தாலுகா அலுவலகம் முற்றுகை

ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி தாலுகா அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2022-08-29 18:33 GMT

கலசபாக்கம்

ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி தாலுகா அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கலசபாக்கம் தாலுகாவுக்கு உட்பட்ட பட்டியந்தல் கிராமத்தில் உள்ள ஏரி கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 30-க்கும் மேற்பட்ட வீடுகளை வருவாய்த் துறையினர் கடந்த வாரம் அகற்றினர். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அருகே உள்ள மட்டவெட்டு கிராமத்தில் மாற்று இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து பட்டியந்தல் கிராமத்தில் அல்லது அருகில் உள்ள வீரளூர் கிராமத்தில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று கலசப்பாக்கம் தாலுகா அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினருடன் சேர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை கலசபாக்கம் தாசில்தார் சமரசம் செய்து தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தால்தான் நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்று கூறினார். அதன் பிறகு அவர்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்துவிட்டு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்