மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு லெனினிஸ்ட் விடுதலை கட்சியின் தாலுகா மாநாடு
எரியோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு லெனினிஸ்ட் விடுதலை கட்சியின் தாலுகா மாநாடு நடந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு லெனினிஸ்ட் விடுதலை கட்சியின் வேடசந்தூர் தாலுகா மாநாடு எரியோட்டில் நடந்தது. இதற்கு ஏரியா கமிட்டி செயலாளர் எஸ்.முருகேசன் தலைமை தாங்கினார். மாநாட்டில் வேடசந்தூர், வடமதுரை ஆகிய 2 ஒன்றிய குழுக்களாக பிரிக்கப்பட்டது. அதில் வேடசந்தூர் ஒன்றிய குழுவில் 11 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் ஒன்றிய செயலாளராக வெ.சங்கிலி தேர்வு செய்யப்பட்டார். வடமதுரை ஒன்றிய குழுவில் 7 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஒன்றிய செயலாளராக ஜெயமணி தேர்வு செய்யப்பட்டார். வேடசந்தூர் ஏரியா கமிட்டி செயலாளராக எஸ்.முருகேசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இந்த மாநாட்டில் வடமதுரையை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் மாவட்ட செயலாளர் பொன்னுதுரை, மாநில குழு உறுப்பினர் ரவி, அசோகன், சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.