தல்லாகுளம் பெருமாள் கோவில் புரட்டாசி திருவிழா

தல்லாகுளம் பெருமாள் கோவில் புரட்டாசி திருவிழா

Update: 2022-09-27 20:19 GMT

அழகர்கோவில்

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலின் உபகோவிலானது மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலாகும். கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக இக்கோவிலில் திருவிழா ஏதும் வெளியில் நடைபெறாமல் உள் புறப்பாடாக விழா நடந்தது. இந்தநிலையில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் முக்கியமான புரட்டாசி பெருந்திருவிழா நேற்று தொடங்கியது. இதில் கோவில் பிரகாரம் முன்புள்ள கொடிமரத்தில் காலை 10.50 மணிக்கு மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன், கருடன் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது.

பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. பின்னர் உற்சவர் பெருமாள், தேவியர்களுடன், முன் மண்டபத்தில் எழுந்தருளினர்.

திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்