போராட்டம் நடத்தும் ஒப்பந்த செவிலியர் பிரதிநிதிகளுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

ஒப்பந்த செவிலியர் பிரதிநிதிகள் உடன் இன்று மாலை பேச்சுவார்த்தை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-01-07 04:28 GMT

சென்னை,

சென்னை எழுப்பூரில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர் சங்க நிர்வாகிகளை இன்று மதியம் 3 மணிக்கு பேச்சுவார்தைக்கு அழைத்து உள்ளேன். போராட்டம் நடத்தும் செவிலியர்களுக்கு நன்றாக தெரியும், அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, பாதுகாப்புதான். பணியில் இருந்து எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 2,300 பேருக்கு மீண்டும் பணி அமர்த்துவதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

அந்த அந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையிலா அமைப்பு மூலம் அவர்கள் மீண்டும் பணி அமர்த்தப்பட உள்ளார்கள். 2,300 செவிலியர்களும் பணியில் அமர்த்தப்படுவதற்கான எல்லா அரசாணைகளும் அறிவிக்கப்பட்டுவிட்டது. இவர்கள் ஏற்கெனவே பெற்ற சம்பவம் 14 ஆயிரம், இனிமேல் இந்த பணியின் மூலம் அவர்கள் பெறவிருக்கும் சம்பவம் 18 ஆயிரம்.

மேலும், இந்த பணியின் மூலம் அவர்கள் சொந்த ஊரிலேயே பாதுகாப்பான பணி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அதை இந்த அரசு செய்துக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்