குழந்தைகளிடம் மனம் விட்டு பேச வேண்டும்

குழந்தைகளிடம் மனம் விட்டு பேச வேண்டும் என மகளிர் போலீசார் அறிவுறுத்தினர்.

Update: 2023-05-11 17:39 GMT

திருப்பத்துர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், வெங்களாபுரம் ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கும் மற்றும் திருப்பத்தூர் ஷூ கம்பெனியில் வேலை செய்யும் பெண்களுக்கும் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. சப்-இன்ஸ்பெக்டர் ராணி மற்றும் மகளிர் போலீசார் கலந்து கொண்டு பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது சப்-இன்ஸ்பெக்டர் ராணி பேசுகையில் உங்கள் குழந்தைகளை யாரிடம் விட்டு வந்தாலும், பணி முடிந்து வீட்டுக்கு போனதும், அவர்களிடம் மனம் விட்டு பேச வேண்டும். தினந்தோறும் அப்படி பேசுவதால், குழந்தைகளுக்கு எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும், அதை முதலில் உங்களிடம்தான் கூறுவார்கள். அதே போல வயதில் மூத்தவர்கள்தான் இப்போது அதிகமாக போக்சோ வழக்கில் கைது செய்யப்படுகின்றனர். அதனால் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து சொல்லிக் கொடுக்க வேண்டும். தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தாலும், தேர்ச்சிபெறவில்லை என்றாலும் அவர்களை திட்டக்கூடாது. அவர்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்