தக்கலை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி ஊழியருக்கு 2 ஆண்டு சிறை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தக்கலை இ.எஸ்.ஐ. அரசு ஆஸ்பத்திரி ஊழியருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2023-06-21 18:45 GMT

நாகர்கோவில்:

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தக்கலை இ.எஸ்.ஐ. அரசு ஆஸ்பத்திரி ஊழியருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி ஊழியர்

தக்கலை இ.எஸ்.ஐ. அரசு ஆஸ்பத்திரியில் மருந்தாளுனராக ராஜகுமார் (வயது 55) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் 14-5-1994 முதல் 31-5-1998 வரை வருமானத்துக்கு அதிகமாக ரூ.5 லட்சத்து 80 ஆயிரத்து 631-க்கு சொத்து சேர்த்துள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து புலன்விசாரணை மேற்கொண்டனர்.

அதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த வழக்கில் கடந்த 3-3-2009 அன்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். வழக்கை தலைமை குற்றவியல் நீதிபதி ஆர்.கோகுலகிருஷ்ணன் விசாரித்து வந்தார்.

2 ஆண்டு சிறை

நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட ராஜகுமாருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டைனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கோகுலகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்தார். மேலும் வருமானத்திற்கு அதிகமாக சேர்த்த சொத்தை பொது ஏலத்தின் மூலம் அரசுடைமையாக்க நீதிபதி ஆணை பிறப்பித்தார்.

இந்த வழக்கில் அரசுதரப்பில் அரசு வக்கீல் ஜென்ஸி ஆஜராகி வாதாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்