சுப்ரீம் கோர்ட்டு கிளையை தமிழகத்தில் அமைப்பதற்கான முன்னெடுப்பைச் செய்ய வேண்டும் - தலைமை நீதிபதிக்கு மநீம வேண்டுகோள்

சுப்ரீம் கோர்ட்டு கிளையை தமிழகத்தில் அமைப்பதற்கான முன்னெடுப்பைச் செய்துதர வேண்டுமென்று தலைமை நீதிபதிக்கு மக்கள் நீதி மய்யம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Update: 2022-08-27 14:45 GMT

சென்னை,

சுப்ரீம் கோர்ட்டு கிளையை தமிழகத்தில் அமைப்பதற்கான முன்னெடுப்பைச் செய்துதர வேண்டுமென்று தலைமை நீதிபதிக்கு மக்கள் நீதி மய்யம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதிக்கு மய்யத்தின் வாழ்த்துகள். 74 நாட்கள் என்ற குறுகிய பதவிக்காலத்தில், தமிழகத்தின் நெடுங்காலக் கோரிக்கையான உச்சநீதிமன்ற கிளையை தமிழகத்தில் அமைப்பதற்கான முன்னெடுப்பைச் செய்துதர வேண்டுமென்று மக்கள் நீதி மய்யம் வேண்டுகோள் விடுக்கிறது.

மேலும், தற்போது நாடெங்கும் நிலுவையில் உள்ள 5 கோடி வழக்குகளை விரைந்து விசாரித்து முடிப்பதற்கான வழிமுறைகளை வகுத்துத் தருவதோடு, அனைத்து நீதிமன்ற விசாரணைகளுக்கும் இணையத்தில் நேரடி ஒளிபரப்பு தரப்பட வேண்டும் என்று தலைமை நீதிபதிக்கு மய்யம் கோரிக்கை விடுக்கிறது" என்று கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்