பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்

சாயல்குடியில் பால்குடம் எடுத்து பெண்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2023-09-05 19:17 GMT

சாயல்குடி,

சாயல்குடி சுயம்புலிங்க நகரில் உள்ள சாயல்குடி பூவன் நாடார் வகையறாவுக்கு பாத்தியப்பட்ட சாஸ்தா சுயம்புலிங்க சுவாமி பிரம்மசக்தி அம்மன் கோவிலில் வருடாந்திர பொங்கல் விழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை, திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையடுத்து சாயல்குடி பத்திரகாளியம்மன் ேகாவிலில் இருந்து பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். பால்குடம் எடுத்த பக்தர்கள் மூலவர் சுயம்புலிங்க சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.

இதனை அடுத்து பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், விபூதி உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்