தையல்காரர் தூக்குப்போட்டு தற்கொலை

தையல்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-06-29 18:53 GMT

கரூர் அருகே உள்ள ஏமூரை சேர்ந்தவர் சரவணன் பூபதி (வயது 38). தையல்காரர். இவருக்கு கடந்த 3 ஆண்டுகளாக மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சரவணன் பூபதி சம்பவத்தன்று வீட்டில் தூக்கில் தொங்கினார்.

இதைக்கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சரவணன் பூபதியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தற்கொலை குறித்த புகாரின்பேரில், பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்