யமுனாம்பாள் கோவிலில் தை கடைசி வெள்ளி வழிபாடு

நீடாமங்கலம் யமுனாம்பாள் கோவிலில் தை கடைசி வெள்ளி வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.

Update: 2023-02-10 18:45 GMT

தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னர் பிரதாப சிம்மரின் மனைவி யமுனாம்பாள். இவர் நீடாமங்கலம் அரண்மனையில் தங்கி இப்பகுதிமக்களை தெய்வம் போல் காத்துவந்தார். இவருக்கு கோவில் எழுப்பி அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகிறார்கள். நீடாமங்கலம் யமுனாம்பாள் கோவிலில் தை கடைசி வெள்ளி வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.

இதை முன்னிட்டு பக்தர்கள் ராஜகணபதி சன்னதியிலிருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. பின்னர் மகாதீபாராதனை காட்டப்பட்டது. பெண்கள் மாவிளக்கிட்டு வழிபாடு நடத்தினர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை சத்திர நிர்வாகத்தினர் மற்றும் உள்ளூர் பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்