விபத்தில் சிக்கிய 2 பேரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்த தாசில்தார்

திருச்செந்தூர் அருகே விபத்தில் சிக்கிய 2 பேரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்த தாசில்தாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Update: 2023-02-26 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே சங்கிவிளை ராமசாமிபுரத்தை சேர்ந்தவர்கள் பெருமாள் மகன் கிருஷ்ணகுமார் (வயது 35), தங்கவேல் மகன் சேர்மதுரை (31). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு திருச்செந்தூர் - பரமன்குறிச்சி மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். சங்கிவிளை அருகே சென்றபோது விபத்தில் சிக்கி பலத்த காயங்களுடன் கீழே விழுந்து கிடந்தனர். அப்போது, அந்த வழியாக ஜீப்பில் வந்த திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன், மேல திருச்செந்தூர் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேஷ் ஆகியோர் அந்த 2பேரையும் மீட்டு ஜீப்பில் ஏற்றி திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு 2 பேரும்தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தாசில்தாரின் இந்த மனிதநேயத்தை பொதுமக்கள் பாராட்டினர். மேலும் இந்த விபத்து குறித்து திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்