தாசில்தார் அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம்

தாசில்தார் அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம்

Update: 2022-09-23 18:45 GMT

குடவாசலில் அரசு கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டக்கோரி தாசில்தார் அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தாசில்தார் அலுவலகம் முற்றுகை

திருவாரூர் மாவட்டம் குடவாசலில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிக்கான புதிய கட்டிடங்களை நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட குடவாசல் பகுதியில் கட்டக்கோரி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் குடவாசல் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் மனோஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆனந்த் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

கடந்த 8 ஆண்டுகளாக குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும் எம்.ஜி.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு, தற்போது திருவாரூர் தொகுதிக்கு உட்பட்ட செல்லூர் பகுதியில் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நன்னிலம் தொகுதிக்குட்பட்ட குடவாசல் பகுதியில் கல்லூரிக்கு கட்டிடம் கட்ட வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் குருநாதன், துணை போலீஸ் சூப்பிரண்டு இலக்கியா, கல்லூரி முதல்வர் மாரிமுத்து ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் தங்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறோம் என அவர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர் கல்லூரி மாணவ-மாணவிகள் தாசில்தாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்