கிராம நிர்வாக அலுவலகத்தில் தாசில்தார் ஆய்வு

குத்தாலம் அருகே கிராம நிர்வாக அலுவலகத்தில் தாசில்தார் ஆய்வு

Update: 2023-06-26 18:45 GMT

குத்தாலம்:

குத்தாலம் தாலுகாவில் உள்ள செங்குடி கிராம நிர்வாக அலுவலகத்தில் குத்தாலம் தாசில்தார் இந்துமதி நேரில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டறிந்தார். பின்னர் பராமரிக்கப்படும் கோப்புகள் குறித்தும் , பதிவேடுகள் குறித்தும் பார்வையிட்டு முறையாக பராமரிக்கப்படுகிறதா என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் அந்தந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசின் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின்போது செங்குடி கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன், கிராம உதவியாளர்கள் சரவணன், நல்ல முகமது ஆகியோர் உடன் இருந்தனர். இதே போல பண்டாரவாடை, வழுவூர், கப்பூர், கோமல், கொடையூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிராம நிர்வாக அலுவலகங்களிலும் தாசில்தார் இந்துமதி ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்