தியாகி அண்ணாமலை பிள்ளை அரசு பள்ளிக்கு ரூ.5 லட்சத்தில் மேஜை, நாற்காலிகள்

திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை பிள்ளை அரசு பள்ளிக்கு ரூ.5 லட்சத்தில் மேஜை, நாற்காலிகளை டாக்டர் எ.வ.வே.கம்பன் வழங்கினார்.

Update: 2023-08-19 12:42 GMT

திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலை பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் விலையில்லா சைக்கிள், ரூ.5 லட்சத்தில் மேஜை, நாற்காலிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை பா.ஜெயக்குமாரி வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் ஆர்.வெங்கடேசன், பள்ளி மாணவர் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் என்.வேல்முருகன், இசைஆசிரியர் தி.பாரதி, அருணை எஸ்.ரவி, ராயல் தியாகு, இ.டி.விஜய், ஆர்.ஆர்.எஸ்.ரஞ்சித்குமார், த.தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு தடகள சங்க துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் கலந்து கொண்டு விலையில்லா சைக்கிள், மேஜை, நாற்காலிகளை வழங்கி பேசினார்.

அப்போது, பள்ளி கல்வித்துறை மீது அரசு அதிக அக்கறை காட்டி வருகிறது. அதனால்தான் பள்ளிக்கல்வித்துறைக்கு சென்ற நிதியாண்டில் ரூ.38 ஆயிரம் கோடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கி கொடுத்துள்ளார்.

இந்தப் பள்ளிக்கு சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பில் மேஜை, நாற்காலி வழங்கப்பட்டுள்ளது. உங்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க இந்த அரசும், நம்முடைய பொதுப்பணித்துறை அமைச்சரும் தயாராக இருக்கிறார்கள் என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் எ.இஸ்மாயில், நகரமன்ற தலைவர் நிர்மலாவேல்மாறன், நகர தி.மு.க. செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர்கழக தலைவர் டி.வி.எம்.நேரு மற்றும் பிரியா விஜயரங்கன், குட்டி க.புகழேந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்