அரசு பள்ளிகளுக்கு மேஜை-நாற்காலிகள்

அரசு பள்ளிகளுக்கு மேஜை-நாற்காலிகள் வழங்கப்பட்டன.

Update: 2023-03-14 18:33 GMT

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளியணை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜெகதாபி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, சின்னமநாயக்கன்பட்டி அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு தேவையான மேஜை, நாற்காலிகள் வழங்கும் நிகழ்வு அந்தந்த பள்ளிகளில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். இதில் சிவகாமசுந்தரி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.29 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான மேஜை, நாற்காலிகளை பள்ளிகளுக்கு வழங்கி பேசினார். அப்போது அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், மாணவ-மாணவிகள் இத்திட்டத்தினை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டு நன்கு படித்து தங்களது நிலையை உயர்த்திக்கொள்ள வேண்டும் என பேசினார். இதில் பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்