கே.ஆர்.பி.அணை அரசு பள்ளிக்கு மேஜை, நாற்காலிகள்அசோக்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை அரசு மேல்நிலைப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள். இங்குள்ள பல வகுப்பறைகளில் மாணவர்கள் தரையில் அமர்ந்து படிப்பதால், பள்ளிக்கு மேஜை மற்றும் நாற்காலிகளை வழங்க வேண்டும் என்று அசோக்குமார் எம்.எல்.ஏ.விடம் பள்ளியின் சார்பில் கோரிக்கை மனு ஒன்றை அளித்திருந்தனர். அதன்படி, சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்பில் 35 செட் மேஜை, நாற்காலிகளை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கிழக்கு ஒன்றிய செயலாளர் கன்னியப்பன் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் நிர்மலா வரவேற்றார். மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன் முன்னிலை வகித்தார். அசோக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மேஜை, நாற்காலிகளை பள்ளிக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, கவுன்சிலர்கள் மகேந்திரன், வேடியப்பன், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் நாராயணசாமி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராஜசேகர், கட்டிகானப்பள்ளி ஊராட்சி துணைத்தலைவர் நாராயணகுமார், முன்னாள் கவுன்சிலர் ரவி, வங்கித்தலைவர் சின்னசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிதம்பரம், கிளை செயலாளர்கள் மாரி, ராமமூர்த்தி, மோகன், பாசறை செயலாளர் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.