கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் தொடக்கம்

சேலம் அரசு நீச்சல் குளத்தில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் தொடங்கியது.

Update: 2023-04-05 20:04 GMT

சேலம் அரசு நீச்சல் குளத்தில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் தொடங்கியது.

நீச்சல் பயிற்சி முகாம்

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் அரசு நீச்சல் குளம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கோடை விடுமுறையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நீச்சல் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது.

இதில், பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டனர். வருகிற 16-ந் தேதி வரை முதல் கட்ட பயிற்சி முகாம் நடைபெறுகிறது. அதன்பிறகு 17-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 2-ம் கட்ட பயிற்சி முகாமும், மே மாதம் 2-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை மூன்றாம் கட்ட பயிற்சி முகாம் நடக்கிறது.

கட்டணம்

தொடர்ந்து 16-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நான்காம் கட்ட பயிற்சி முகாமும், மே 30-ந் தேதி முதல் ஜூன் 11-ந் தேதி வரை ஐந்தாம் கட்ட பயிற்சி முகாமும் நடைபெறுகிறது. வாரத்தில் செவ்வாய் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நீச்சல் பயிற்சி நடைபெறும். திங்கட்கிழமை தோறும் நீச்சல் குளம் விடுமுறை என்றும், 12 நாட்கள் நீச்சல் பயிற்சிக்கு ரூ.1,770 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அரசு நீச்சல் குள அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்