நீச்சல் குளத்தில் விழிப்புணர்வு செஸ் போட்டி
நீச்சல் குளத்தில் விழிப்புணர்வு செஸ் போட்டி நடந்தது.
சென்னை மாமல்லபுரத்தில் 44-வது உலக ெசஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளதை முன்னிட்டு திருச்சி மாவட்ட அண்ணா விளையாட்டு அரங்க வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நேற்று காலை விழிப்புணர்வு செஸ் போட்டி நடைபெற்றது. மாநகர போலீஸ் துணை கமிஷனர் அன்பு போட்டியை தொடங்கி வைத்தார். நீச்சல் குளத்தில் தண்ணீரில் இருந்தபடியே வீரர்-வீராங்கனைகள் செஸ் போட்டியில் பங்கேற்று விளையாடினார்கள். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசுகந்தி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.