சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது

சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது.

Update: 2023-04-25 18:45 GMT

சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது.

சுவாமிநாதசாமி கோவில்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாதசாமி கோவில் உள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா வரு்கிற 28-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து விழா நாட்களில் சுவாமிநாதசாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது.

தேரோட்டம் 

வருகிற 2-ந் தேதி தன்னைத்தானே பூஜித்தலும், 6-ந் தேதி தேரோட்டமும், 7-ந் தேதி நடராஜர்-சிவகாமியம்மாள் மாணிக்கவாசகர் தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சி மற்றும் திருவீதியுலா, தீர்த்தவாரியும் நடக்கிறது.

8-ந் தேதி சுவாமிநாதசாமி விழா முடிந்து யதாஸ்தானம் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை கோவில் இணை ஆணையர் மோகனசுந்தரம், துணை ஆணையர் உமாதேவி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்