சங்கரன்கோவிலில் பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா
சங்கரன்கோவிலில் பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடந்தது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வருதல் நடந்து வருகிறது. 7-ம் நாளான நேற்று முன்தினம் இரவு சிவகாமி அம்பாள் சமேத நடராஜர் ருத்ரன் அம்சத்தில் சிவப்பு சாத்தி கோலத்திலும், அதனை தொடர்ந்து நள்ளிரவில் பிரம்மா அம்சத்தில் வெள்ளை சாத்தி கோலத்திலும் காட்சி கொடுத்தனர்.
8-ம் நாளான நேற்று காலை சிவகாமி அம்பாள் சமேத நடராஜர் விஷ்ணு அம்சத்தில் பச்சை சாத்தி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தொடர்ந்து வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், சுவாமி அம்பாள் தந்தபல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.