சுவாமி-அம்பாள் பூம்பல்லக்கில் வீதி உலா

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் சித்திரை திருவிழாவையொட்டி சுவாமி-அம்பாள் பூம்பல்லக்கில் வீதிஉலா வந்தனர்.

Update: 2023-04-27 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பிரமோற்சவ திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. தினமும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு சுவாமி-அம்பாள் பூம்பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்