நெல்லை மாவட்ட கல்வி அலுவலர் பணி இடைநீக்கம்

நெல்லை மாவட்ட கல்வி அலுவலர் திடீரென பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2022-11-30 20:08 GMT

நெல்லை மாவட்ட கல்வி அதிகாரியாக இருந்தவர் லட்சுமண சாமி. இவர் நேற்று ஓய்வு பெறுவதாக இருந்தாா். இதற்கிடையே, நேற்று முன்தினம் திடீரென அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் பணியாற்றியபோது அவர் மீது எழுந்த புகார் சம்பந்தமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஓய்வுபெற இருந்த நிலையில் அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நெல்லை மாவட்ட கல்வி அலுவலராக, கருங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலன் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்