தலைமை ஆசிரியர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்
தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
வினாத்தாள் கசிந்தது
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஏ.மணக்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. தற்போது காலாண்டு தேர்வு நடந்து வந்த நிலையில், 6-ம் வகுப்பு அறிவியல் தேர்வுக்கான வினாத்தாள் அந்த பள்ளியில் இருந்து கசிந்ததாக பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட கல்வி அலுவலர் பாலாஜி நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.
இந்த விசாரணையில் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மீனாம்பர், அறிவியல் ஆசிரியர் ஜெயக்குமார், கணித ஆசிரியர் குமாரவேல் ஆகியோருக்கு அறிவியல் பாடத்தின் வினாத்தாள் தேர்வுக்கு முதல் நாளே வெளியானதில் தொடர்பு இருந்தது தெரியவந்தது.
பணியிடை நீக்கம்
இதை தொடர்ந்து தலைமை ஆசிரியர் உள்பட 3 ஆசிரியர்களையும் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் உத்தரவின் பேரில் மாவட்ட கல்வி அலுவலர் பாலாஜி பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நடவடிக்கை கல்வித்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.