பரமத்திவேலூர் பேரூராட்சி செயல் அலுவலருக்கு கொலைமிரட்டல்: துப்புரவு மேற்பார்வையாளர் பணி இடைநீக்கம்

பரமத்திவேலூர் பேரூராட்சி செயல் அலுவலருக்கு கொலைமிரட்டல் விடுத்த துப்புரவு மேற்பார்வையாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2022-07-08 17:06 GMT


பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் பேரூராட்சி செயல் அலுவலராக பணி புரிந்து வருபவர் சுப்ரமணியன். இவர் கடந்த 2 மாதங்களாக மருத்துவ விடுப்பில் இருந்துள்ளார். விடுப்பு முடிந்து கடந்த 4-ந் தேதி பணிக்கு திரும்பினார். அப்போது திடக்கழிவு பணியை சரிவர செய்யவில்லை என்று கூறி துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேஷ் உள்பட 3 பேருக்கு அவர் மெமோ கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் செயல் அலுவலர் சுப்ரமணியனுக்கும், வெங்கடேசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வெங்கடேஷ் தகாத வார்த்தையால் பேசி, சுப்ரமணியனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து சுப்ரமணியன் பரமத்திவேலூர் போலீசில் புகார் அளித்தார். மேலும், சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். இந்தநிலையில் உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்ரமணியன், துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் பேரூராட்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்