கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் பணியிடை நீக்கம்

வீட்டுமனை பட்டா வழங்கியதில் முறைகேடு தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Update: 2022-06-26 16:43 GMT

தேவகோட்டை, 

வீட்டுமனை பட்டா வழங்கியதில் முறைகேடு தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

வீட்டுமனை பட்டா

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே மேலச் செம்மன்மாரி குரூப் கிராம நிர்வாக அலுவலர் ராஜலட்சுமி. இவரிடம் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு சிலர் கடந்த மாதம் விண்ணப்பித்தனர். இதை விசாரித்த கிராம நிர்வாக அதிகாரி ராஜலட்சுமி, அதே குரூப்பில் பணிபுரியும் கிராம உதவியாளர் கருப்பனின் மனைவி மற்றும் ஒரே குடும்பத்தை சேர்ந்த பலருக்கு முறைகேடாக பட்டா வழங்க பரிந்துரை செய்துள்ளார்.

இது குறித்து அந்த கிராமத்தை சேர்ந்த பெரியசாமி, தேவகோட்டை கோட்டாட்சியர் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் செய்தார்.

மேலும் கிராம நிர்வாக அதிகாரி ராஜலட்சுமி இந்த பட்டா மாறுதல் குறித்து என்ன நடந்தது என்பது சம்பந்தமாக பேசிய 20 நிமிடம் ஓடக்கூடிய ஆடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய கோட்டாட்சியர் பிரபாகரன் நடவடிக்கை எடுக்க தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.

உத்தரவு

இந்த உத்தரவை தொடர்ந்து கிராம உதவியாளர் கருப்பன், ெசலுகைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர் ராஜலட்சுமியை, கோட்டாட்சியர் பிரபாகரன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

அதே போல் கிராம உதவியாளர் கருப்பனையும் தாசில்தார் அந்தோணிராஜ் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்