ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம்
ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இளையான்குடி,
இளையான்குடி ஒன்றியம் கீழநெட்டூர் ஊராட்சி செயலராக பாபு என்பவர் பணி புரிந்துவந்தார். இவரை ஊராட்சி ஒன்றியத்தில் நடக்கும் ஆய்வுக்கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை உள்ளிட்ட காரணங்களுக்காக பணியிடை நீக்கம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சாந்தி உத்தரவிட்டு உள்ளார்.மேலும் கீழ நெட்டூர் ஊராட்சி பணிகளை கூடுதல் பொறுப்பாக நெஞ்சத்தூர் ஊராட்சி செயலாளர் சத்யராஜ் கவனிக்க நியமிக்கப்பட்டுள்ளார்.