மர்ம நபர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்

செஞ்சியில் ஆர்.எஸ்.எஸ். சுவர் விளம்பரம் அழிப்பு: மர்ம நபர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் இந்து அமைப்பினர் போலீஸ் நிலையத்தில் புகார்

Update: 2022-09-25 18:45 GMT

செஞ்சி

விழுப்புரத்தில் அடுத்த மாதம்(அக்டோபர்) 2-ந் தேதி நடைபெற உள்ள ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு குறித்து செஞ்சி-விழுப்புரம் சாலையில் எழுதப்பட்ட சுவர் விளம்பரத்தின் மீது யாரோ மர்ம நபர்கள் வெள்ளை அடித்து அழித்துள்ளனர். இதுபற்றி அறிந்த செஞ்சியை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். மாவட்ட செயலாளர் நாராயணமூர்த்தி தலைமையில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியன், பா.ஜ.க. மாவட்ட முன்னாள் செயலாளர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் தங்கராமு, விஷ்ணு ராஜன், வெங்கடேசன், மோகன், சந்திரசேகர், பாபு உள்ளிட்டோர் செஞ்சி போலீஸ்நிலையத்தில் புகார் மனு கொடுத்தனர்.

அதில் ஆர்.எஸ்.எஸ்.அணி வகுப்பு குறித்து எழுதப்பட்ட சுவர் விளம்பரத்தை அளித்த மர்ம நபர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும், மீண்டும் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் போலீசார் விழிப்புடன் இருக்க வேண்டும் என கூறியிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்