முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு முன்னாள் தலைவர் சாவில் சந்தேகம் ;போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு

முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு முன்னாள் தலைவர் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது.

Update: 2022-07-07 18:14 GMT

நாகர்கோவில், 

முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு முன்னாள் தலைவர் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது.

சாவில் சந்தேகம்

குமரி மாவட்ட அனைத்து முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் எம்.ஏ.கான் மற்றும் நிர்வாகிகள் நேற்று நாகர்கோவிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், "தேங்காப்பட்டணம் முஸ்லிம் ஜமாத்தின் முன்னாள் தலைவர் முஜீபு சம்பவத்தன்று நெட்டயிலிருந்து களியலை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது கடையாலுமூடு அருகே கட்டச்சல் என்னும் இடத்தில் சென்றபோது ஒரு வாகனம் மோதியது.

இதில் படுகாயம் அடைந்து முஜீபு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். ஆனால் அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக அவரது தந்தை காதர் என்பவர் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே முஜீபு மரணம் குறித்து முறையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்