கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆய்வு

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆய்வு செய்தார்.

Update: 2023-01-11 16:41 GMT

தேனி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 வழங்கும் பணி நடந்து வருகிறது. தேனி, போடி, மேலச்சொக்கநாதபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை, தேனி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமார் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படும் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றின் தரத்தை ஆய்வு செய்தார். தரம் குறைவான பொருட்கள் இருந்தால் அதை விற்பனை செய்யாமல் நிறுத்தி வைத்து, பொதுவினியோக திட்ட கூட்டுறவு சார் பதிவாளர்களுக்கு தகவல் கொடுத்து அதனை மாற்றுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விற்பனையாளர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார். மேலும், பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது, துணைப்பதிவாளர் (பொது வினியோகத் திட்டம்) சேகர் மற்றும் சார்பதிவாளர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்