முக்கொம்பு மேலணையில் பொதுப்பணித்துறை தலைமை செயலாளர் ஆய்வு

முக்கொம்பு மேலணையில் பொதுப்பணித்துறை தலைமை செயலாளர் ஆய்வு நடத்தினார்.

Update: 2022-11-30 19:07 GMT


முக்கொம்பு சுற்றுலா மையத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளிடம் பாலம் உடைந்தது. இதனையடுத்து அங்கு புதிதாக பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. தற்போது, அந்த பணிகள் முடியும் நிலையில் உள்ளது. நேற்று பொதுப்பணித்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா கொள்ளிடம் பாலத்திற்கு வந்தார். அவர் தற்போது, புதிதாக கட்டப்பட்ட கொள்ளிடம் பாலத்தின் மதகுகளின் தன்மை குறித்து கேட்டறிந்தார். மேலும் முக்கொம்பு காவிரி பாலத்தில் 35-வது மதகு தூண் விரிசல் ஏற்பட்ட பகுதியையும் பார்வையிட்டார். பின்னர் அங்கு இருந்த பொதுப்பணித்துறை அதிகாரியிடம் சாய்ந்த மதகுகளின் நிலை குறித்து கேட்டறிந்தார். ஆய்வின் போது, திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, நடுக்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் சொர்ணகுமார், ஆற்று பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன், உதவி பொறியாளர் ராஜா மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்