கலெக்டர் துரை ரவிச்சந்திரன் ஆய்வு

சிவகிரி வட்டார பகுதியில் கலெக்டர் துரை ரவிச்சந்திரன் ஆய்வு

Update: 2023-02-12 18:45 GMT

சிவகிரி:

தென்காசி மாவட்ட புதிய கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் சிவகிரி தாலுகா அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவருக்கு தாசில்தார் பழனிசாமி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தாலுகா அலுவலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக சிவகிரி வட்டார பகுதியில் உள்ள நகரம், முள்ளிக்குளம், ராமசாமியாபுரம், நெல்கட்டும்செவல் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டப்பணிகள், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட பணிகள், 15-வது மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் உள்ள பணிகள், ஒருங்கிணைந்த பணி மேம்பாட்டு திட்டப்பணிகள் உள்ளிட்டவற்றை குறித்து ஆய்வு செய்தார்.

தொடர்ந்து வாசுதேவநல்லூர் யூனியன் அலுவலகம், பேரூராட்சி அலுவலகத்துக்கு சென்று ஆய்வு செய்தார்.

வாசுதேவநல்லூர் பேரூராட்சி பகுதிக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் வழங்க வேண்டியும், பேரூராட்சியை சிறப்பு நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டியும் கலெக்டரிடம் வாசுதேவநல்லூர் பேரூராட்சி தலைவர் லாவண்யா ராமேஸ்வரன், நிர்வாக அதிகாரி மோகன மாரியம்மாள் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர்.

நிகழ்ச்சியில் யூனியன் ஆணையாளர்கள் ஜெயராமன், கருப்பசாமி, பொறியாளர் அருள்நாராயணன், பணி பார்வையாளர் முத்துமாரி, நியமன குழு உறுப்பினர் முனீஸ், கவுன்சிலர் சரவணன், தாசில்தார் பழனிச்சாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தென்காசி மாவட்ட புதிய கலெக்டர் ரவிச்சந்திரன் புளியங்குடி நகராட்சி பகுதிகளில் ஆய்வுக்காக வருகை தந்தார். அவரை நகராட்சி தலைவர் விஜயா சவுந்திர பாண்டியன் வரவேற்றார். அரசு மருத்துவமனையில் உள்கட்டமைப்பு வசதி, நோயாளிகளின் வருகை குறித்து தலைமை டாக்டர் கோதரி யாசர் அரபாத், டாக்டர் போத்திராஜ், மருத்துவமனை அதிகாரி பாலமுருகன் ஆகியோரிடம் கேட்டறிந்தார்.

பின்னர் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இந்திரா நகரில் கட்டப்பட்டு வரும் பூங்கா கட்டுமான பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து கொக்குரணியில் செயல்பட்டு வரும் பசுமை நுண் உரக்குடிலில் உரங்கள் தயாரிக்கும் முறைகள் பற்றியும், தயாரித்த உரங்களையும் ஆய்வு செய்தார்.

ஆய்வில் நகராட்சி ஆணையாளர் சுகந்தி, பொறியாளர் முகைதீன் அப்துல் காதர், சுகாதார ஆய்வாளர்கள் கைலாசம், கணேசன், மேற்பார்வையாளர்கள் கார்த்திகேயன், திருமலைவேலு, அண்ணாதுரை, மற்றும் துறை அதிகாரிகள், நகராட்சி ஊழியர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்