கீழப்பாவூர் வட்டாரத்தில் வேளாண்மை அதிகாரி ஆய்வு

கீழப்பாவூர் வட்டாரத்தில் மண்டல வேளாண்மை இணை இயக்குனர் முரளி ஆய்வு செய்தார்.

Update: 2022-11-26 18:45 GMT

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூர் வட்டாரத்தில் குணராமநல்லூர், அரியப்பபுரம், பெத்தநாடார்பட்டி ஆகிய கிராமங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை சென்னை வேளாண்மை இயக்குனர் அலுவலக மண்டல இணை இயக்குனர் முரளி ஆய்வு செய்தார். குணராமநல்லூர் கிராமத்தில் உள்ளாட்சி துறை மூலம் அமைக்கப்பட்ட தடுப்பணை, மரக்கன்று நாற்றாங்கால் மற்றும் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் திடல்களை பார்வையிட்டார். அரியப்பபுரம் கிராமத்தில் விவசாயிகளுக்கு வழங்கிய தென்னங்கன்றுகளை பார்வையிட்டு பராமரிப்பு தொழில்நுட்பம் குறித்து எடுத்துரைத்தார். அரியப்பபுரம் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சுவர் விளம்பரங்களை பார்வையிட்டு விவசாயிகளிடம் திட்டம் குறித்து கலந்துரையாடினார். பெத்தநாடார்பட்டி கிராமத்தில் அமைக்கப்பட்ட தரிசு நில தொகுப்பு திடல் மற்றும் அதில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணற்றை பார்வையிட்ட பின்னர், செல்லதாயார்புரம் கிராமத்தில் உள்ள விவசாயிகளின் வயலில் உளுந்து விதைப்பு பணியை தொடங்கி வைத்தார். மேலும் தொகுப்பு திடலில் உள்ள அனைத்து விவசாயிகளிடமும் திட்டங்கள் குறித்து கலந்துரையாடினார்.

நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்மலர், வேளாண்மை துணை இயக்குனர் (மாநில திட்டம் மற்றும் மத்திய திட்டம்) நல்லமுத்துராஜா, தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி, வேளாண்மை உதவி இயக்குனர் சேதுராமலிங்கம், தோட்டக்கலை உதவி இயக்குனர் ஞானசேகரன், குணராமநல்லூர் பஞ்சாயத்து தலைவி சுபா ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர் விமலாதேவி, துணை வேளாண்மை அலுவலர் முருகன், உதவி வேளாண்மை அலுவலர்கள் மாரியம்மாள், ரமேஷ், செய்யது அலி பாத்திமா, உதவி தொழில்நுட்ப மேலாளர் சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்