ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குனர் ஆய்வு
ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குனர் ஆய்வு செய்தார்.
பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஆவணம் பெரியநாயகிபுரம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குனர் பிரசாந்த், தஞ்சை மாவட்ட கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது பெரியநாயகிபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டபணிகள், ஆவணம் அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர், சைக்கிள் செட், அகமுடையார் தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சமையல் கூடம், வடிகால் வாய்க்கால், ஆதிதிராவிடர் தெரு சிமெண்டு சாலை, துலுக்க விடுதி வடக்கு குடிநீர் பணிகள், 15-வது நிதிக்குழு வேலை திட்ட பணிகள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து ஒன்றிய அலுவலக பதிவேடுகளையும் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது ஊரக வளர்ச்சி உதவி செயற் பொறியாளர் விஸ்வநாதன், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் மோகன் (தணிக்கை) மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வந்திரன், தவமணி, பொறியாளர் பாரதிதாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.