கண்காணிப்பு கேமராக்கள்

நெல்லை பெருமாள்புரத்தில் கண்காணிப்பு கேமராக்கள்- போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தொடங்கி வைத்தார்

Update: 2022-09-02 21:13 GMT

நெல்லை பெருமாள்புரம் ராமசந்திரா நகர் குடியிருப்பு பகுதியில், குற்ற சம்பவங்களை தடுக்கவும், குற்ற சம்பவங்களை விரைந்து கண்டுபிடிக்க போலீசாருக்கு உதவும் வகையில் ராமசந்திரா நகர் மக்கள் நலச்சங்கம் மற்றும் மாநகர 54-வது வார்டு உறுப்பினர் கே.கே.கருப்பசாமி கோட்டையப்பன் மற்றும் நிர்வாகிகள் சார்பில் 21 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதன் திறப்பு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் நலச்சங்க தலைவர் சக்திபிரபாகரன் தலைமை தாங்கினார். மாநகராட்சி 54-வது வார்டு உறுப்பினர் கருப்பசாமி கோட்டையப்பன், மேலப்பாளையம் உதவி போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் (கிழக்கு) கலந்து கொண்டு, கண்காணிப்பு கேமராக்களை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, மக்கள் நலச்சங்க செயலாளர் செந்தில்குமார், துணை தலைவர் ரெங்கராஜ், துணை செயலாளர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மக்கள் நலச்சங்க பொருளாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்